ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் 4-வது வெற்றி பெற்று அசத்தல்

  தினத்தந்தி
ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் 4வது வெற்றி பெற்று அசத்தல்

ரூர்கேலா, 6-வது ஆக்கி இந்தியா லீக் தொடர் ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி ஷராச்சி ரார் பெங்கால் டைகர்சை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது தமிழ்நாடு தரப்பில் கார்த்தி செல்வம் மற்றும் உத்தம் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். பெங்கால் தரப்பில் ரூபிந்தர் பால் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார். இந்த தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் பெற்ற 4-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் டூபான்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகளும், இரவு 8.15 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ் - உ.பி. ருத்ராஸ் அணிகளும் மோதுகின்றன.

மூலக்கதை