ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேற்றம்

  தினத்தந்தி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி முதல் சுற்றோடு வெளியேற்றம்

மெல்போர்ன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ் - ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மார்ட்டினஸ் - ஜாம் முனார் ஜோடியிடம் தோல்வி கண்டு முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.

மூலக்கதை