'ஜெயிலர் 2' அறிவிப்பு டீசருக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்சன்

  தினத்தந்தி
ஜெயிலர் 2 அறிவிப்பு டீசருக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்சன்

சென்னை,கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.இந்தசூழலில், நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இது இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அந்த டீசருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரியாக்சன் கொடுத்துள்ளார். அதன்படி, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'வாவ் ஜெயிலர் 2. தலைவர் + அனிருத் + நெல்சன்= பிளாஸ்டோ பிளாஸ்ட்டு' என்று பதிவிட்டுள்ளார்.Wowwww!! #Jailer2 ❤️Thalaivar + Ani + Nelsa = Blast-O-Blast!!! https://t.co/K5syQC7K9i

மூலக்கதை