டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா

  தினத்தந்தி
டெல்லி சட்டசபை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் மணீஷ் சிசோடியா

புதுடெல்லி,70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெல்லி சட்டசபை தேர்தலுக்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.இந்நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, இன்று நான் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராகவும், அரவிந்த் கெஜ்ரிவாலின் சிப்பாயாகவும் ஜங்புரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஜங்புரா மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் அளித்த அன்பை இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சிக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கல்வி, சுகாதாரம் மேம்பாடு மூலம் மக்களின் எதிர்காலத்திற்கு பங்களிக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை