நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது - உள்துறை அமைச்சகம்
டெல்லி,சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்இதனிடையே, சத்தீஷ்கார் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி என்கவுன்டரில் 17 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டில் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சத்தீஷ்கார் என்கவுன்டரில் 17 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி நக்சலிசம். இதை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவதில் மோடி அரசு உறுதியாக உள்ளது. சத்தீஷ்காரின் பிஜாபூரில் நேற்று மத்திய பாதுகாப்புப்படையினரும், மாநில போலீசாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் நக்சலைட்டுகளுக்கு எதிராக நல்ல வெற்றி கிடைத்துள்ளது. நக்சலைட்டுகள் இல்லாத நாடு என்ற பாதையை நோக்கி மோடி அரசு தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. 2026 மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடாக மாறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.