குளிருக்காக மூட்டிய நெருப்பு... புகையால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழப்பு

  தினத்தந்தி
குளிருக்காக மூட்டிய நெருப்பு... புகையால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழப்பு

டேராடூன்,உத்தரகாண்ட் மாநிலத்தில் குளிருக்காக மூட்டிய நெருப்பால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இடைநிலைக் கல்லூரியில் எழுத்தராக பணிபுரிபவர் மதன் மோகன் செம்வால் (52 வயது). அவரது மனைவி யசோதா தேவி (48 வயது). இருவரும் பிலங்கானா பகுதியில் உள்ள துவாரி தப்லா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழவால் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக குளிர்காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி தூங்கியுள்ளனர். இந்த நிலையில் நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நேற்று காலையில் அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து தம்பதியின் உடலை உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை