ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

  தினத்தந்தி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. உட்பட 46 வேட்பாளர்கள் போட்டி

ஈரோடு,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேர்று வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். இந்த சூழலில் நேற்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். பின்னர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதி என்பவரின் மனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டநிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46ஆக குறைந்துள்ளது.

மூலக்கதை