சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? ஹர்பஜன் கணிப்பு

  தினத்தந்தி
சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா  பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? ஹர்பஜன் கணிப்பு

மும்பை, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.இதில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த தனது கணிப்பை ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கண்டிப்பாக வெல்லும். நீண்ட நாட்கள் கழித்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதால் அது பற்றிய பரபரப்பு இருக்கும். துபாயில் நிறைய இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இருப்பார்கள். எனவே அங்கு இரண்டு அணிகளுக்கும் மின்சாரத்தை போன்ற ஆதரவு இருக்கும். ஆனால் அங்கே இந்தியா வெற்றியை பெறக்கூடிய அணியாக வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என கூறினார்.

மூலக்கதை