'திரு. மாணிக்கம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

  தினத்தந்தி
திரு. மாணிக்கம் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு.மாணிக்கம். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதை பற்றி பேசும் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 'பொம்மக்கா' பாடல், டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது. இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி வெளியானது, இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றதுஇந்நிலையில், 'திரு. மாணிக்கம்'படம் ஜீ5 தமிழ் ஓ.டி.டி தளத்தில் வரும் ஜனவரி 24 ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.Thirai Ulagme Pugazhntha Thiru Manickam Ungal Veedu Thedi Varugiraar ❤️The Rare Gem of Tamil Cinema #ThiruManickam will be premiering from 24th January on ZEE5 in Tamil, Kannada & Malayalam! @thondankani @NandaPeriyasamy @dirlingusamy @offBharathiraja @Gprkcinemas… pic.twitter.com/Sm5ixuL12E

மூலக்கதை