குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

  தினத்தந்தி
குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

ஸ்ரீநகர்,இந்தியாவின் 76-வது குடியரசு தினம் வரும் 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-மந்திரி உமர் அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.குடியரசு தின கொண்டாட்டங்களை சுமூகமாக நடத்துவதற்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் வி.கே.பிர்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், வரும் 26ம் தேதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகல் முழு வீச்சில் உள்ளன. விழா மற்றும் அணிவகுப்பு மக்கள் ரசிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவிற்காக பல அடுக்கு போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

மூலக்கதை