மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

  தினத்தந்தி
மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை: முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

சென்னை,2 நாள் சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அவர் புதிய திட்ட பணிகளுக்கும், தொடங்கப்பட உள்ள பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி சிவகங்கையில் கல்லூரி சாலை இருபுறங்களிலும் கட்சி கொடிகளும், அலங்கார தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்தநிலையில் முக்குவந்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் சேது கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழினத்தின் வீரமரபின் அடையாளம், மண் விடுதலைக்கான முதல் முகவரி மாமன்னர்கள் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (22.01.2025) அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் திருவுருவச் சிலைகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மட்டுமல்லாமல், ரூ.50 இலட்சம் செலவில் சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலத்தின் சிலையினைத் திறந்துவைக்கிறார். சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்-அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்து நன்றியை நான் சார்ந்த முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை