பொள்ளாச்சி ஆழியார் அணையை கண்டு ரசித்த ரஷிய நடன கலைஞர்கள்
கோவை,இந்தியா-ரஷியா நட்புறவு கழகம் சார்பில் கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், 50-க்கும் மேற்பட்ட ரஷிய நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை பூங்காவுக்கு வந்திருந்த ரஷிய நடன கலைஞர்கள், அணையை சுற்றிப் பார்த்து அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ரஷிய நடன கலைஞர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.