பரந்தூர் மக்களை பாதிக்காமல் ஏர்போர்ட் - தமிழ்நாடு அரசு
சென்னை,காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாகவும் இருப்பதால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்தநிலையில், பரந்தூர் மக்களை பாதிக்காமல் புதிய ஏர்போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வுசெய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பண்ணூரில் 1,546 குடும்பங்கள், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா வளர்ச்சிபெறும். மக்களின் வாழ்வாதாரம். நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.*பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை மார்ச் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.* 2 மாதங்களில் இழப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.* நிலம், வீடு, விவசாய நிலங்களை வழங்கியவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட உள்ளது. பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.