ஜீத்து ஜோசப்-ஆசிப் அலி கூட்டணி...பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

  தினத்தந்தி
ஜீத்து ஜோசப்ஆசிப் அலி கூட்டணி...பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

மலையான சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஜீத்து ஜோசப். இவர் 2010-ம் ஆண்டு 'மம்மி & மீ' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் மோகன்லாலை வைத்து 'நேரு' என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் தற்போது ஒரு புதிய படத்தினை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'மிராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளார். 'கூமன்' படத்தின் வெற்றி பிறகு, இப்படத்தில் ஜீத்து ஜோசப் மற்றும் ஆசிப் அலியின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்கான பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு விஷ்ணு ஷ்யாம் இசை, ஒளிப்பதிவு சதீஷ் குரூப் செய்யவிருக்கிறார்கள். மிராஜ் படத்தின் திரைக்கதையை ஜீத்து ஜோசப் ஸ்ரீநிவாஸ் அப்ரோல் உடன் இணைந்து எழுதியுள்ளார். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

மூலக்கதை