மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவியேற்பு
மும்பை,மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், கடந்த 17-ந்தேதி பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து, மும்பை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே இன்று பதவியேற்று கொண்டார்.அவருக்கு மராட்டிய கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மராட்டிய துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதேபோன்று, டெல்லி கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், டெல்லி ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக இன்று பதவியேற்று கொண்டார். இதில், டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி, மூத்த அரசு அதிகாரிகள், டெல்லி ஐகோர்ட்டின் பல்வேறு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.