ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் தரவரிசை; பேட்டிங் பட்டியலில் ஏற்றம் கண்ட ஸ்மிருதி மந்தனா
துபாய்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மகளிருக்கான ஒருநாள் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா (738 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் (773 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இலங்கையின் சமாரி அத்தபத்து (733 புள்ளி) 3வது இடத்திலும், இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர் பிரண்ட் (725 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர்.ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (770 புள்ளி) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (724 புள்ளி) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மேஹன் ஸ்கட் (696 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவின் தீப்தி சர்மா (680 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து 4வது இடத்திற்கு வந்துள்ளார். ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (469 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து முதல் இடத்திற்கு வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மரிசேன் கேப் (444 புள்ளி) 2வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (426 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர்.Ash Gardner at the Australia's all-round star makes major gains in the latest ICC Rankings https://t.co/IjjNioBuIl