குடும்பஸ்தன் படத்தின் 'காத்து நம்ம பக்கம்' பாடல் புரோமோ வெளியீடு

  தினத்தந்தி
குடும்பஸ்தன் படத்தின் காத்து நம்ம பக்கம் பாடல் புரோமோ வெளியீடு

சென்னை,தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம்', லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் 'குடும்பஸ்தன்' படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் 'ஜீரோ பேலன்ஸ் ஹீரோ' பாடல் வெளியாகி வைரலானது. இப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஓ.டி.டி உரிமையை பிரபல நிறுவனமான ஜீ5 ஓ.டி.டி தளம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடலான 'காத்து நம்ம பக்கம்' புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் வைசாக் மற்றும் ஏகன் இடம் பெற்றுள்ளார்.#KaathuNammaPakkam - the promo song from #Kudumbasthan is out now don't miss the film in theatres on 24th January! ▶️ https://t.co/j2H5whn6ulA @VaisaghOfficial musical. @Cinemakaaranoff @Manikabali87 @saanvemegghana @vinoth_offl @gurusoms @DirRajeshwark @prasannaba80053 pic.twitter.com/Kbel48dwoc

மூலக்கதை