'காத்து வாக்குல ஒரு காதல்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
சென்னை,இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலைப் மையமாகக் கொண்டு, தற்போது சமூக வலைத்தளங்களில் இளம்பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ள படமாக உருவாகியுள்ளது "காத்து வாக்குல ஒரு காதல்" திரைப்படம்.மாஸ் ரவி பூபதி 'காத்து வாக்குல ஒரு காதல்' திரைப்படத்தை எழுதி, இயக்குவது மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் லட்சுமி பிரியா மற்றும் மஞ்சுளா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்தியா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, பவர் ஸ்டார் சீனிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மீப்பு, மொசக்குட்டி பிரியதர்ஷினி, பிரியங்கா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, ஜி.கே.வி இசையமைத்துள்ளார். 'காத்து வாக்குல ஒரு காதல்' படத்தை சென்னை புரடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு ஏற்ப காதல், காமெடி, ஆக்சன், திரில்லர், எமோஷனல் என கமர்சியல் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் படமாக்கி வருகின்றனர்.இரண்டு கதாநாயகிக்குள் நடக்கும் உண்மை காதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில், தற்போது இளம் பெண்களின் வாழ்க்கை சமூக வலைதளங்களில் எப்படி சீரழிகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தை படமாக்கி இருக்கின்றனர்.சமீபத்தில் தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், ரசிகர்களை கவர்ந்தும் வருகிறது.ஏற்கனவே 'காத்து வாக்குல ரெண்டு' படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா, சமந்தா என இரு நாயகிகள் நடித்து வெளிவந்த படம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது நினைவிருக்கலாம். தற்போது அதேபோல் 'காத்து வாக்குல ஒரு காதல்' படத்திலும் காதலை மையமாகக் கொண்டு இரண்டு நாயகிகளும், ஒரு நாயகனும் நடித்துள்ளனர்.Kathuvaakula Oru Kadhal Official Trailer | Ezhil Iniyan P | Maass Ravi | G.K.V | Chennai Productions https://t.co/uWn2aNNzPq pic.twitter.com/9pH8MUBQpy