டங்ஸ்டன் - நாளை அதிகாரபூர்வ தகவல்; அண்ணாமலை பேட்டி

  தினத்தந்தி
டங்ஸ்டன்  நாளை அதிகாரபூர்வ தகவல்; அண்ணாமலை பேட்டி

புதுடெல்லி, டெல்லியில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-டங்ஸ்டன் தொடர்பாக அமைச்சர் கிஷன் ரெட்டியை போராட்டக்குழுவினருடன் சந்தித்தோம். மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் நிறைவேற்றப்படாது என்று உறுதியாக கூறியுள்ளார். போராட்டக்குழுவினருக்கு பாஜக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றி தருகிறோம். அரிட்டாபட்டியில் சுரங்கம் வராது என்ற உறுதியை பாஜக நிறைவேற்றும். தன்னை நம்பிய மக்களை பிரதமர் கைவிடவில்லை. தமிழக விவசாயிகள், மக்களுடன் பிரதமர் எப்போதும் இருப்பார். டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக நாளை மகிழ்சியான செய்தி அதிகாரப்பூர்வமாக வரும் என்றார்.

மூலக்கதை