அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

  தினத்தந்தி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுரை,மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 16-ந் தேதி ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 76 பேர் காயம் அடைந்தனர். இதில், 17 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.அதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வமுருகன் (வயது 45) என்பவர், காளை முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.ஏற்கனவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (66) என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை