ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி - அமைச்சர் செந்தில் பாலாஜி

  தினத்தந்தி
ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி  அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும், 'இரும்பின் தொன்மை' என்ற நுாலை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.அத்துடன், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு, அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே, உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இதை ஆய்வு முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன் என்று கூறினார்.இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-தமிழுக்கு என்ன வரலாறு இருக்கிறது என ஏளனம் பேசினார்கள், ஆரியமும் வடமொழியும்தான் உலகுக்கெல்லாம் மூத்தவை என கொக்கரித்தார்கள். தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்கலாமா? வரலாறு இருக்கிறதா என்று கேட்டார்கள்? ஆதிக்கப் பேச்சுகளுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு அகழ்வாய்வு மூலமும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது தமிழ்நாடு. கீழடி, தமிழ் நகர நாகரிகத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது. இன்று இரும்பின் பயன்பாடு 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நிலப்பரப்பில் இருந்ததை உலகுக்கு அறிவித்து தமிழ் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றுக்கே ஒரு திருப்புமுனையை காட்டியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.இந்த மகத்தான கண்டுபிடிப்பானது தமிழை இருட்டடிப்பு செய்த ஆதிக்கவாதிகளின் கற்பனை வரலாறுகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க இருக்கிறது. தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்தும் உணர்வுப்பணியை செய்துவரும் திராவிட மாடல் அரசின் கொள்கை முனைப்பிற்கு கிடைத்த வரலாற்று வெற்றி இது. உலக நாகரீகத்தின் தனித்துவ தொட்டிலான தமிழ் நிலத்தில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியதென அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்து நிரூபித்து, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மண்ணிற்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.தமிழுக்கு என்ன வரலாறு இருக்கிறது என ஏளனம் பேசினார்கள், ஆரியமும் வடமொழியும்தான் உலகுக்கெல்லாம் மூத்தவை என கொக்கரித்தார்கள்.தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வைக்கலாமா? வரலாறு இருக்கிறதா என்று கேட்டார்கள்?ஆதிக்கப் பேச்சுகளுக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு அகழ்வாய்வு மூலமும்தக்க… pic.twitter.com/zxtIdw94g9

மூலக்கதை