ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
மெல்போர்ன், 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதினார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6(8)-7(10) என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் .நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - மேடிசன் கீஸ் ஆகியோர் மோதுகின்றனர்.