இந்திய-அமெரிக்க நாடுகளின் கூட்டு தயாரிப்பு நான் - சத்யா நாதெல்லா பேச்சு
நியூயார்க், அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள இந்திய துணை தூதரகம் சார்பில் இந்தியாவின் 76-வது குடியரசு தின விழா, பெல் ஹார்பர் மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் வாஷிங்டன் மாகாண கவர்னர் பாப் பெர்குசன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சத்யா நாதெல்லா பேசுகையில், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பிணைப்பின் தயாரிப்பு நான். கல்வி விளைவுகள், சுகாதாரம், பொது சேவை செயல்திறன், போட்டித்தன்மை மற்றும் சிறு வணிகங்களின் உற்பத்தித்திறன் ஆகியவற்றைப் பயன்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் இரு நாட்டு தலைவர்களும் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றார். வாஷிங்டன் மாகாணா கவர்னர் பெர்குசன், இந்திய சமூகம் இந்தியாவிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் பங்களிப்பை செய்துள்ளது என்றார்.நிகழ்ச்சியில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்தும் ஒரு தனித்துவமான கலாசார பாரம்பரிய தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.