பொய் புகாரில் போக்சோ நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து.. இளைஞரை விடுவித்த சென்னை ஐகோர்ட்டு

  தினத்தந்தி
பொய் புகாரில் போக்சோ நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து.. இளைஞரை விடுவித்த சென்னை ஐகோர்ட்டு

சென்னை,கடந்த 2018ம் ஆண்டு கோவையை சேர்ந்த குமார் என்பவர் தன் மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது தொடர்பான புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தொல்லை அளித்து வந்ததாகவும் போத்தனூர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாயார் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குமரை கைது செய்து கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்தபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் சகோதரியை, குமார் காதலித்து வந்ததால் அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது அம்பலம். இதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து குமாரை சென்னை ஐகோர்ட்டு விடுவித்தது.

மூலக்கதை