பஞ்சாப்: லாரி மீது வேன் மோதி விபத்து - 9 பேர் பலி

சண்டிகர்,பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வேனில் சென்றனர். கொல்காமவுர் என்ற கிராமம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
