சைபர் குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன : திரவுபதி முர்மு
புதுடெல்லிதொழில்நுட்பமானது காலப்போக்கில் மென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில் குற்றங்களும் நாளுக்கு நாள் வாளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. டிஜிட்டல் கைது உள்ளிட்ட மோசடி செயல்கள் மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் குற்றசெயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சைபர் குற்றங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு பிரச்சினை ஏற்படுவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது.அதிகரித்து வரும் டிஜிட்டல் சமூகத்தில், சைபர் பாதுகாப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. டிஜிட்டல் மோசடி, சைபர் குற்றம் மற்றும் டீப் பேக் படங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நமது சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்திய அரசாங்கம் இந்த சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இளைஞர்களுக்கு சைபர் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. என்று தெரிவித்துள்ளார்.