"எமகாதகி " திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

சென்னை,நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.திரைத்துறையில் தொழில்நுட்ப கலைஞர்களாக, கலையை நேசிக்கும் உண்மையான காதலர்களாக வலம் வரும் நண்பர்கள் நடிகர் வெங்கட் ராகுல் மற்றும் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர்களை கலையும் சினிமா மீதான காதலும் நண்பர்களாக இணைத்துள்ளது.ஒரு பெண் முதன்மை நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். இப்படத்தில் நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோருடன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். தஞ்சாவூரை சுற்றிய கிராமங்களில் இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் நடக்கும், சூப்பர் நேச்சுரல் மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி வைரலானது.இந்நிலையில், "எமகாதகி" திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.Let love and music intertwine! ❤️ 'Uyir Koottula' – the first single from Yamakaathagi is coming on Feb 1st! Can't wait for you to hear it! @RoopaKoduvayur @NPoffl @kailasam_geetha @venkatrahul_J@srinivasjalakam @GanapathiReddy_ @YeshwaPictures @naisatmedia @arunasreeents… pic.twitter.com/pMcVXOGlOP
மூலக்கதை
