சென்னை ஓபன் டென்னிஸ்: தமிழக வீரர் தோல்வி
சென்னை, சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரரான ராம்குமார் , ஜெய் கிளார்க்கிடம் (இங்கிலாந்து) மோதினார் .பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-6, 5-7 என்ற நேர் செட்டில் ஜெய் கிளார்க்கிடம் தோற்று வெளியேறினார். ஒற்றையரில் தோல்வி அடைந்த ராம்குமார், அடுத்து இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனியுடன் இணைந்து விளையாட உள்ளார்.