தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு

  தினத்தந்தி
தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் முக்கிய உத்தரவு

சென்னை,தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இதுவரை 76 மாவட்டங்களுக்கு செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார்.ஒரு மாதத்திற்குள் நிர்வாகிகளை நியமனம் செய்து அதன் பட்டியலை அனுப்ப மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த நகர்வை விஜய் முன்னெடுத்துள்ளார்.

மூலக்கதை