தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.7,930-க்கு விற்பனை

சென்னை, சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை தினமும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.63,240-க்கு விற்பனையானது. மேலும், கடந்த 9 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,160 அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் உயர்வை சந்தித்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.7930-க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூ.63,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருவது நகை மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மூலக்கதை
