துபாயில் இருந்து இலங்கை வந்த கரடிகள் - வெளியான முக்கிய காரணம்! - லங்காசிறி நியூஸ்

தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் விலங்கியல் பூங்காக்களில் கண்காட்சிக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (UAE) ஒரு ஜோடி பழுப்பு கரடிகள், ஒரு ஜோடி ஹைனாக்கள் மற்றும் மூன்று ஜோடி மீர்கட்களை இலங்கை பெற்றுள்ளது.குறித்த விலங்குகள் திங்கள்கிழமை (10) நாட்டிற்கு வந்தடைந்தன. மூன்று ஜோடி மீர்கட்கள் ரிதியகம சஃபாரி பூங்காவிற்கு (Ridiyagama Safari Park) அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கரடிகள் மற்றும் ஹைனாக்கள் ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்காக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் விலங்குகள் பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தேசிய விலங்கியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.
மூலக்கதை
