வாசிம் அக்ரமை விட அந்த ஆப்கானிஸ்தான் வீரர் சிறந்தவர் - பாக்.முன்னாள் வீரர் கருத்து

  தினத்தந்தி
வாசிம் அக்ரமை விட அந்த ஆப்கானிஸ்தான் வீரர் சிறந்தவர்  பாக்.முன்னாள் வீரர் கருத்து

லாகூர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் தற்சமயம் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சியில் முகமது நபிக்கு அடுத்து இவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் தற்போது ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு ஐ.சி.சி. தொடர்களில் அதிர்ச்சி அளித்து வருகிறது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அந்த அணி முதன் முறையாக களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஜாம்பவான் வாசிம் அக்ரமை விட ரஷித் கான் சிறந்த வீரர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஷித், ஆப்கானிஸ்தானை உலக வரைபடத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்துள்ளார், அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க உதவியுள்ளார். இதை சொல்வதற்கு எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது ஆனாலும் சொல்கிறேன். எங்களுடைய வாசிம் அக்ரமை விட ரஷித் கான் சிறந்த வீரராக இருக்கிறார். ரஷீத் கானுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை மட்டுமே கூற விரும்புகிறேன். உங்கள் டெஸ்ட் அணியை மேம்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள்" என்று கூறினார்.

மூலக்கதை