ரஞ்சி டிராபி அரையிறுதி; மும்பை அணியில் இருந்து ஜெய்ஸ்வால் விலகல்

மும்பை,90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இந்த தொடரின் லீக் மற்றும் காலிறுதி ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, மும்பை, விதர்பா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.குஜராத் - கேரளா இடையிலான அரையிறுதி ஆட்டம் அகமதாபாத்திலும், மும்பை - விதர்பா இடையிலான அரையிறுதி ஆட்டம் நாக்பூரிலும் நடக்கின்றன. இந்நிலையில், விதர்பாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் இருந்து இளம் அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகி உள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டதை அடுத்து ஜெய்ஸ்வால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கணுக்கால் காயம் காரணமாக அவர் விதர்பாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கான மும்பை அணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
மூலக்கதை
