விஜய் சாரிடம் பேச முடியவில்லை.. கைகள் நடுங்கின - நடிகை மமிதா பைஜு

சென்னை,எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை மமிதா பைஜு நடிகர் விஜய்யை முதல் முறையாக நேரில் சந்தித்ததை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.அதாவது, "நான் விஜய் சாரை நேரில் பார்த்தபோது மிகவும் பதற்றமடைந்து விட்டேன். 'ஹாய் சார்' என்று சொன்னேன். அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை, கைகள் நடுங்கின. இதனை அறிந்த விஜய் சார் என்னை நோக்கி நடந்து வந்து 'ஹாய் மா' என்று கை கொடுத்து அரவணைத்துக் கொண்டார். அந்தத் தருணத்தை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. விஜய் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்தவும் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
