இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்ட மம்முட்டி படம்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மம்முட்டி தமிழில், மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.கடந்த வருடம் பிப்ரவரியில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் 'பிரம்மயுகம்' என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் கதையும் மம்முட்டியின் தோற்றமும் மட்டுமல்ல படத்தின் காட்சிகளும் பின்னணி இசையும் கூட ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றன. இந்த படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கி இருந்தார். படத்தின் சவுண்ட் எபெக்ட்ஸ் அனைத்தும் சிறப்பு. 'பிரம்மயுகம்' திரைப்படம் மோனோகுரோம் வடிவத்தில் கிளாஸ்ட்ரோபோபிக் அனுபவத்தைக் கொடுக்கிறது.இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை பண்பாட்டுக் பல்கலைகழகம் ஒன்றில் திரைப்பட பயிற்சி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 'பிரம்மயுகம்' படம் ஒரு பாடமாக திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் உள்ள காட்சிகளின் அமைப்பு மற்றும் இசை குறித்து அந்த மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.A post shared by Night Shift Studios (@allnightshifts)
மூலக்கதை
