"லக்கி பாஸ்கர்" பட இயக்குநருடன் இணையும் சூர்யா ?

  தினத்தந்தி
லக்கி பாஸ்கர் பட இயக்குநருடன் இணையும் சூர்யா ?

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது.நடிகர் சூர்யா கங்குவா படத்தின் தோல்விக்குப் பின் மிக கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தன் 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் முதல் என்ஜின் எப்படி உருவானது என்பதைப் பற்றிய கதை என்பதால் '760 சிசி' என படத்தலைப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் உலகளவில் ரூ 107 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அற்புதமான வசூலை ஈட்டியது.

மூலக்கதை