திருப்பதியில் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

  தினத்தந்தி
திருப்பதியில் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

திருப்பதி,நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழில் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா ரஜினிகாந்த நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ள நிலையில், சுமார் 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலம் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் அவருக்கு வேத ஆசிர்வாதம் வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கோயில் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி பட்டு வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்தனர். புதிதாக துவங்கப்போகும் படம் நல்லபடியாக வரவேண்டும் என்பதற்காக தான் ஐஸ்வர்யா திருப்பதிக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை