ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அ.ம.மு.க. சார்பில் 4 நாட்கள் பொதுக்கூட்டம்

சென்னை, அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி மாலை 4 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கட்சி ரீதியான மாவட்டங்கள் வாரியாக வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலான 4 நாட்கள் அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் திட்டமிடப்பட்டு உள்ளன. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.இந்த பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன், நிர்வாகிகள் ஒன்றிணைந்து சிறப்போடு நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
