பாலியல் குற்றங்களுக்கு செல்போன் முக்கிய காரணமாக இருக்கிறது - கருணாஸ்

  தினத்தந்தி
பாலியல் குற்றங்களுக்கு செல்போன் முக்கிய காரணமாக இருக்கிறது  கருணாஸ்

நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது;"விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது பாதுகாப்பு சார்ந்து, மத்திய அரசு வழங்கியது. இதற்கு அரசியல் காரணம் இருக்கலாம். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிறைவாக உள்ளது. எந்த காலத்திலும் இருமொழிக் கொள்கையை தமிழக அரசு விட்டுத்தராது.பாலியல் பிரச்சினைகள் 15 ஆண்டுகளாகவே அதிகரித்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அதற்கு இன்றைய வாழ்க்கை முறை மற்றும் செய்போன் பயன்பாடும் முக்கிய காரணமாக இருக்கிறது. இன்றைய செல்போன் பயன்பாடுகள், தவறான விஷயத்தை உடனுக்குடன் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறது. ஒரு இடத்தில் சிறிய தவறுகள் நடப்பதை ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்தும்போது, அதே தவறு மீண்டும் நடைபெறுகிறது என்பதே எனது கருத்து. சில இடங்களில் தவறுகள் நடந்தாலும், அதற்கு தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது."இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை