கோவையில் பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காக நடத்தப்பட்டு வரும் இந்த 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சிக்கு மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில், கோவையில் 9-வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று களைகட்டியது. கொடிசியா பகுதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கரகாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் படம் வரைதல், கிரிக்கெட், காகித ராக்கெட், பம்பரம், பரமபதம், உடற்பயிற்சி ஆகியவையும் இடம்பெற்றன. இசை நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர். அடுத்த வாரத்துடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதாக ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
