திண்டுக்கல்: மூதாட்டியை தாக்கி 6.5 பவுன் நகை பறிப்பு

  தினத்தந்தி
திண்டுக்கல்: மூதாட்டியை தாக்கி 6.5 பவுன் நகை பறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிறுகுடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). அவருடைய மனைவி சந்திரா (65). இவர், சிறுகுடி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.வீட்டின் அருகே சென்றபோது பின்னால் வந்த மர்மநபர் ஒருவர் சந்திராவை தலையில் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் சந்திரா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை