பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

  தினத்தந்தி
பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சென்னை,சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூர் - திருச்சி பிரிவில் கரூர் - வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் பராமரிப்பு பணி நடை7பெற உள்ளன. இதையொட்டி மயிலாடுதுறையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) நாளை வீரராக்கியம் ரெயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியம் முதல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வரை இயக்கப்படாது. மேலும் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்.இதேபோன்று நாளை மற்றும் 25, 27-ந் தேதிகளில் ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (13352) கோவை ஜங்ஷன் ரெயில் நிலையம் செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் மதியம் 12.17 மணிக்கு போத்தனூர் வந்தடையும். அங்கிருந்து 12.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.இதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12678) நாளை மற்றும் 25, 27 ஆகிய தேதிகளில் கோவை ஜங்ஷன் வழியாக செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும், இந்த ரெயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் வந்தடையும். தொடர்ந்து அங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை