மராட்டியத்தில் ரூ. 2.21 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

  தினத்தந்தி
மராட்டியத்தில் ரூ. 2.21 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்  ஒருவர் கைது

தானே,மராட்டிய மாநிலம் தானே நகரில் உள்ள கட்டிடத்தில் அதிக அளவு குட்கா பதிக்கவைக்கப்பட்டிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்று மதியம் அம்பேவாடியில் பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் போது ஒரு கட்டிடத்தில் உள்ள அறை ஒன்றில் ரூ. 2.21 லட்சம் மதிப்புள்ள பதிக்கி வைக்கப்படிருந்த குட்கா கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நதீம் முகமது பாஹிம் மன்சூரி (வயது 22) என்பரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை