ஆந்திரா: ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி

  தினத்தந்தி
ஆந்திரா: ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் 3 பெண்கள் பலி

குண்டூர்,ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நீருகொண்டா கிராமத்தில் மிளகாய் வயலில் வேலை செய்ய தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆட்டோ மீது அம்மாநில அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து மாவட்டத்தின் செப்ரோலு மண்டல் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்கள் அருணா, நாச்சரம்மா மற்றும் சீதாரவம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் செப்ரோலு மண்டலத்தில் உள்ள சுத்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இந்த விபத்து தொடர்பாக செப்ரோலு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை மந்திரி மண்டலி ராம்பிரசாத் ரெட்டி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, காயங்களுடன் குண்டூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை