சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தும் அமெரிக்கா

சான் ஜோஷி,அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறை டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதுமுதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் இதுவரை 332 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 3 விமானங்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அதேவேளை, இவர்களில் ஆண்கள் கை, கால்களில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை விலங்கிட்டு அழைத்து வரும் சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தியர்கள் உள்பட மத்திய ஆசியா நாடுகளை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 200 பேரை விமானம் மூலம் மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவுக்கு விமானம் மூலம் அமெரிக்கா நாடு கடத்த உள்ளது. அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் நாளை ராணுவ விமானம் கோஸ்டாரிகாவின் ஜுவன் சண்டமரினா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து அகதிகள் முகாம்களுக்கு அழைத்து செல்லப்படும் 200 பேரும் பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில், எத்தனைபேர் இந்தியர்கள் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்காவில் இருந்து அனுப்பப்படும் சட்டவிரோத குடியேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பாலமாக கோஸ்டாரிகா செயல்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மூலக்கதை
