மகனுடன் சேர்ந்து விளையாட விருப்பம்: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்

காபூல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது ஆடி வருகிறார்.இந்நிலையில் முகமது நபி தனது ஓய்வு முடிவை தற்போது திரும்ப பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மகனுடன் சேர்ந்து விளையாட விருப்பம் ஏற்பட்டுள்ளதால் முடிவை மாற்றியுள்ளார்.முகமது நபியின் மகனான ஹசன் ஐசாகில் (வயது 18) ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த ஜூனியர் உலகக்கோப்பையில் விளையாடினார். இதனால் அவர் விரைவில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக மகனுடன் சேர்ந்து விளையாடும் ஆசையால் நபி ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.
மூலக்கதை
