3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்த அயர்லாந்து

ஹராரே, அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைச் ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி பால்பிர்னி (64 ரன்கள்), ஹாரி டெக்டர் (51 ரன்கள்) மற்றும் டக்கர் (62 ரன்கள்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. ஜிம்பாப்வே தரப்பில் ந்கரவா மற்றும் டிரெவர் க்வந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கி உள்ளது.
மூலக்கதை
