மகா கும்பமேளா: பஸ்-லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 18 பேர் காயம்

  தினத்தந்தி
மகா கும்பமேளா: பஸ்லாரி மோதி விபத்து ஒருவர் பலி, 18 பேர் காயம்

சத்திஸ்கர்,சத்திஸ்கர்-மத்திய பிரதேச எல்லையில் இருந்து மகா கும்பமேளாவிற்கு தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஹைர்ஜிதி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தின் உதவியாளர் உயிரிழந்தார். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அனுப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை