'குட் பேட் அக்லி' படத்தில் கேமியோ ரோலில் சிம்ரன்!

  தினத்தந்தி
குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் சிம்ரன்!

சென்னை,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த மாத இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக அப்பேட் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், குட் பேட்லி அக்லி படத்தில் நடிகை சிம்ரன் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நடிகை சிம்ரன் 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்துடன் இணைந்து 'வாலி, அவள் வருவாளா, உன்னை கொடு என்னை தருவேன்' என பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை