'அமரன்' படத்திற்காக உடலமைப்பை மாற்றிய சிவகார்த்திகேயன் - வைரலாகும் வீடியோ

சென்னை,இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.இந்த நிலையில், அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தீவிரமாக உடற்பயிற்சிகள் செய்து தனது உடலமைப்பை முழுமையாக மாற்றினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது உடல் அமைப்பை எப்படி மாற்றினார் மற்றும் உடற்பயிற்சியின் போது அவர் பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன.So cute❤️SK & Kutty SK during the workout session pic.twitter.com/j1cZGGoy6XPain of #Sivakarthikeyan during his physical transformation !!Now all that resulted as success in #Amaran❤️ pic.twitter.com/aPhJmtxM8R
மூலக்கதை
